கல்வி, அதன் பயன் குறித்த தீர்க்கமான சிந்தனை பெரும்பாலான ஆசிரியர்களிடம் இல்லை.பணம் குறித்தே யோசிக்கிறார்கள்.கல்வியும் அதை நோக்கியே நகர்ந்துள்ளது.
விலை உயர்ந்த பள்ளியில் முதலீடு செய்தால் நல்ல வேலையில் அறுவடை செய்யலாம் என குழந்தைகளின் கண்ணைக்கட்டி ஓடவிடுகிறார்கள். அதற்காகவே அரசுப்பள்ளிகள் தரக்குறைவுடன் நடத்தப்படுகின்றன. வெளிப்படையாக ஆசிரியர் தெரிவதுபோல மறைமுகக்காரணிகளும் உண்டு. எனினும் ஆசிரியர்களுக்கே பெரும்பங்கு உண்டு.
அருகமைப்பள்ளி குறித்து யாரும் மூச்சு விடுவதில்லை. இன்னும் இலவசத்திட்டங்களை முறைப்படுத்தினாலே நல்ல பயன் கிடைக்கலாம். உதாரணமாக, இலவச பயண அட்டையின் பயண தூரத்தைக்குறைக்கலாம். +2 வகுப்பிற்கு படித்து முடித்தபின் மடிக்கணினி வழங்குவதை நிறுத்தலாம்.
ஆசிரியர் தனது குழந்தையை அரசுப்பள்ளியில் படிக்கவைத்தால் ஊக்க ஊதியம்
அளிக்கலாம். ஆசிரியருக்கு ஆண்டுதோறும் அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை
தேர்வு வைத்து சமகால அறிவை பரிசோதித்து தேறினால் மட்டுமே ஆண்டு ஊதிய உயர்வு
வழங்கலாம்..........
யோசிக்கலாம்.
No comments:
Post a Comment