ஏதாவது பேசும்போது தம் மேதைத் தனத்தைக் காட்டப் பலர்
பயன்படுத்தும் வார்த்தைகள்,"சைக்காலஜி, ஃபிராய்ட் ".
குறிப்பாகப் பாலுணர்வு
குறித்துப் பேசுபவர்கள் தாங்கள் சொல்வதுதான் உண்மை என நிலைநாட்ட,
ஃபிராய்ட் பெரிதும் பயன்படுகிறார்.
மனம்,பாலியல், ஒழுக்கம்,மதம்,நரம்பு நோய்கள் எனப் பல பொருள்கள் பற்றி ஃபிராய்ட் கூறுவது என்ன?
உளவியல் நூலை தக்க கலைச்சொற்களோடு வாசிப்பவர் புரிந்துகொள்ளும்படியான சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
இது போன்ற மொழி பெயர்ப்பு நூல்கள் தமிழ்ச் சிந்தனைப் பரப்பிற்கு புதிய வெளிகளைக் காட்டும்.
கதை, கட்டுரை போலில்லாமல் நிறுத்தி, யோசித்து வாசித்தால் ஃபிராய்ட் வசப்படுவார்.
No comments:
Post a Comment