மதுரையைச்
சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்ற மனிதர், சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் chef வேலைக்குச் செல்லும் முன் தனது ஊருக்கு
வந்தார். சாலையோரம் உணவின்றித் தவித்த முதியவரைப் பார்த்தபோது மன மாற்றமடைந்து ,
ஆதரவின்றித் தவிப்போருக்கு உணவு சமைத்துத் தருபவராக மாறினார். இன்று அவர் தொடங்கிய அக்க்ஷயா டிரஸ்ட் ஆதரவற்றவர் காப்பகமாக வளர்ந்துள்ளது.
ஆதரவின்றித் தவிப்போருக்கு உணவு சமைத்துத் தருபவராக மாறினார். இன்று அவர் தொடங்கிய அக்க்ஷயா டிரஸ்ட் ஆதரவற்றவர் காப்பகமாக வளர்ந்துள்ளது.
பைசலின் காதல், உஸ்தாத் ஹோட்டலை ஆக்கிரமிக்க நினைக்கும் 5 நட்சத்திர விடுதி உரிமையாளரின் கோபம்- அதனால் உஸ்தாத் ஹோட்டல் மூடப்பட்டு மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்கப்படுதல் எனக் கதை சீராகச் செல்கிறது.
ஐரோப்பிய கேரளா உணவுத்திருவிழாவிற்கு வந்த chef மூலம் பைசலுக்கு பாரிஸில் வேலை கிடக்கிறது.தாத்தாவின் உடல் நலம் குறைகிறது. நல்ல வேலைக்குச் செல்லும்வேலையில் தாத்தா இப்படி உணர்வுப்பூர்வமான தடையாக இருக்கிறாரே என வருந்துகிறான்.
உனக்கு விருப்பமான வேலைக்குப் போ.அதற்கு முன் மதுரையிலிருக்கும் எனது நண்பரான நாராயணன் கிருஷ்ணனிடம் இந்தக் கடிதத்தையும் பணத்தையும் கொடுத்துவிட்டு வா எனக் கூறுகிறார்.
பைசல் மதுரை பயணமாகிறான்.
நாராயணன் கிருஷ்ணனைப் பார்த்து கடிதம் மற்றும் பணத்தக்
கொடுக்கிறான்.கரிமின் பேரன் என அறிந்து அவரும் மகிழ்கிறார். கடிதத்தைப்
படிக்கிறார்.
" அன்பு நண்பரே,இந்தக் கடிதம் கொண்டு வருபவன்
என் பேரன்.எப்படிச் சமைப்பது என்று அவனுக்குச் சொல்லிக்
கொடுத்திருக்கிறேன்.ஏன்? சமைக்க வேண்டுமென நீங்கள்தான் சொல்லித்தர
வேண்டும்"
நாராயணன் கிருஷ்ணன்வீட்டில் நிறையப் பேருக்கு உணவுதயாராகிக் கொண்டிருக்கிறது.அவருடன் சென்று அனைத்தையும் பார்க்கிறான் பைசல்.மறுநாள் ஒரு மனநலம் குன்றியோர் விடுதிக்குச் சமைக்கச் செல்லும் நாராயணன் கிருஷ்ணன்,பைசலை பிரியாணி செய்யச் சொல்கிறார்.தாத்தா சொல்லித்தந்தபடி செய்கிறான் பைசல். குழந்தைகளின் அன்பு அவனை மாற்றுகிறது.ஊர் திரும்புகிறான். தாத்தா இறந்துவிட்ட செய்தி அறிந்து வருந்துகிறான்,உஸ்தாத் ஹோட்டலைத் தொடர்ந்து நடத்துகிறான்.
படத்தில் அனைவரும்
மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். கரீமாக நடித்துள்ள முதுபெரும் நடிகர் திலகன்
இன்று நம்மிடையே இல்லையே என்ற எண்ணமே கண்களை நனைக்கிறது.
மனதை நிறைக்கும் கதை.எவ்வளவோ ஓடி ஆடிச் சம்பாதிக்கிறோம்,ஏன் ? என்று எண்ணியதுண்டா?
மனதை நிறைக்கும் கதை.எவ்வளவோ ஓடி ஆடிச் சம்பாதிக்கிறோம்,ஏன் ? என்று எண்ணியதுண்டா?