Monday 25 June 2012

கனவும் நம்பிக்கையும்                                                                                                                   
http://www.dancewithshadows.com/movies/wp-content/uploads/2008/11/taare-zameen-par-oscar-plagiarism.jpg http://tamil.way2movies.com/wp-content/uploads/2012/06/saguni_releasing.jpg                                                                                                                                                                                                       விடுமுறை நாளில் ஏதாவது படம் பார்க்கலாம் என்று சகுனி பார்த்தேன்.
முதலமைச்சராக வேண்டிய நல்லவர் மீது பெண் பழி சுமத்தி அரசைப்பிடிக்கும் வில்லன்.ஆகா அற்புதமான தொடக்கம் என மனம் மகிழ்ந்தது.
                          பாலம் கட்டுவதால் இடிபடப்போகும் தனது பரம்பரை வீட்டை (தினமும் நூற்றுக்கணக்கானோர் சாப்பிட்டுச்செல்லும் தர்மப்பிரபுவின் வீடு)
காக்கத் தனி மனிதனாக அமைச்சரைப்பார்க்க நகரம் வருகிறார் ஹீரோ.
                        வழக்கம் போலவே அரசியல்வாதி  ஏமாற்ற அடுத்தடுத்து  திருப்பங்களுடன் படம் விறுவிறுப்படைகிறது.
                        கதாநாயகன் கமலக்கண்ணன் -கிருஷ்ணசகுனியாய்,
*இட்லிக்கடை வட்டிக்காரியை கவுன்சிலராக்கி மேயரக்குகிறார்.
         அடியாட்களுடன் வட்டி வசூலித்தவர் மேயரானதும் திருந்தி மக்களுக்காக 
         உழைக்கிறார்.
*மரத்தடி சாமியாரை கார்பரேட் சாமியாராக்கி கோடிகளைக் குவிக்க       வைக்கிறார்.
* சிறையிலிருக்கும் எதிர்க்கட்சித்தலைவரை ஒரே கேள்வியில் பதவி ஆசையை இழக்கவைத்து மக்கள் தலைவனாக்கி ஆட்சியில் அமர்த்துகிறார்.
                                         இடையிடையே கதாநாயகியுடன் பாடல்,குத்துப்பாடல், சந்தானத்தின் நகைச்சுவை? என  இரண்டரை மணி நேரக்கனவில் மட்டுமே எல்லாம் சுபமாய் முடிய இருட்டுக் கொட்டகையிலிருந்து வெளியே வந்தேன்.
40 டிகிரி வெயில் முகத்தில் அறைந்தது.
                                    எவ்வளவு  பட்டாலும்  என்றாவது  இவர்கள் திருந்திவிடுவார்கள்  என்ற நம்பிக்கையிலேயே  இது போன்ற படங்களுக்குச்சென்று  தலைவலியை வாங்கிக்கொள்வதே என் வேலை.
                                    கைவசம் மருந்திருக்கு... பல்வேறு படங்களில் இன்று இரவு பார்த்தது , 
தாரே ஜமீன் பர் . 
                                  தன்னைப்போலவே டிஸ்லெக்ஷியா பாதிப்புள்ள மாணவனை படிக்கவும் வரையவும் மாற்றும் ஓவிய ஆசிரியரின் கதை. எத்தனைமுறை பார்த்தாலும் மனசுக்கு தெம்பு தருகிறது.

                               மசாலாப்படங்களின் கனவிலிருந்து மீட்டு எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை தரும் படத்தைப்  பார்த்த பின்பே தூங்கச்சென்றேன்.
ஆழ் துயிலில் தொடரும், கனவும் நம்பிக்கையும். 
           





Saturday 23 June 2012

பெரியார் - யார்?

பெரியாரும்  பாலாஜி சக்திவேலும் 

http://profile.ak.fbcdn.net/hprofile-ak-ash2/203620_162783540454645_6938247_n.jpg 
               பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் , பத்தாம் வகுப்புப் பாடம்.
நடத்தத் தொடங்கும் முன் மாணவர்களிடம் கேட்டேன்,
பெரியார் யார்?
                         பேச்சாளர் 
                         எழுத்தாளர் 
                         எல்லாத்துக்கும் காசு வாங்குவார்.....?
                         சுதந்திரப் போராட்ட வீரர் 
எனச் சில மாணவர்கள் சொல்ல மற்றவர்கள் வழக்கம் போல்  அமைதியாய்.
அதிர்ச்சியாக இருந்தாலும் யோசித்தேன். 

சமூக விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள் மறக்கப்படுவது ஏன் ?
யார் காரணம்? மாணவர்களைக் குறை சொல்லுவது நியாயமில்லை.

பள்ளிப்பாடங்கள் வெறும் மனப்பாடங்களாக மாறி நீண்ட காலமாகிவிட்டது.

நண்பர் சுரேஷை சந்தித்த போது கூறினார்,
 சமீபத்தில் இயக்குனர் பாலாஜி சக்திவேலை சந்தித்தேன்.இவர் ஆசிரியர் என்று என் நண்பர் அறிமுகம் செய்து வைத்தார்.உடனே அவர் என் கைகளைப்பிடித்துக்  கொண்டு  கூறினார்,"நண்பரே,உங்கட்ட  தான் எதிர்காலமே இருக்கு.நீங்க எது சொன்னாலும் பசங்க நம்புவானுங்க.
நல்லா சொல்லிக்கொடுங்க."என்று சொன்ன போது நான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்.
இதைக்கேட்டவுடன் எனக்கும் பெருமிதமாக இருந்தது.
ஒரு ஆசிரியனாக தினம் தினம் கற்றுக்கொண்டேயிருக்கிறேன்.